இனி நான்கு மணிநேரமே மின்வெட்டு! இலங்கை மின்சார சபையின் தலைவர் அறிவிப்பு

ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்  நேரத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 2ஆம் திகதி எமக்கு ஒருதொகை டீசல் வருகின்றது. அந்த டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படும் எனக் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. எனவே, 2ஆம் திகதிக்குப் பிறகு தற்போதைய … Read more

அரசுக்கு எதிராக வெளிநாட்டுச் சதி – இம்ரான் கான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தமது அரசுக்கு எதிராக வெளிநாட்டுச் சதி உள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், அதற்கான சான்றுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், 342 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியின் பலம் 164ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஆளுங்கட்சியின் அதிருப்தி வேட்பாளர்கள் உட்பட எதிர்க்கட்சியின் பலம் 177ஆக அதிகரித்துள்ளது. தனது அரசைக் கவிழ்க்க வெளிநாட்டுச் சதி உள்ளதாகக் கூறிய பிரதமர் இம்ரான்கான் அது குறித்த சான்றுகளை ராணுவம், உளவுத்துறைத் … Read more

சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள் இருப்பு வரம்பு டிசம்பர் இறுதி வரை நீட்டிப்பு

சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள் இருப்பு வைப்பதற்கான உச்ச வரம்பை டிசம்பர் இறுதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தவும் பதுக்கலைத் தடுக்கவும் இருப்புக்கான உச்ச வரம்பை அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி சில்லறை வணிகர்கள் 30 குவிண்டாலும், மொத்த வணிகர்கள் 500 குவிண்டாலும் சமையல் எண்ணெய் இருப்பு வைக்கலாம். சில்லறை வணிகர்கள் 100 குவிண்டாலும், மொத்த வணிகர்கள் இரண்டாயிரம் குவிண்டாலும் எண்ணெய் வித்துக்களை இருப்பு வைக்கலாம். இந்தக் கட்டுப்பாடு இன்றுடன் … Read more

போதையில் இருந்த 2 ரஷ்ய வீரர்களால் இளம்தாயாருக்கு நேர்ந்த கொடூரம்! அருகே அழுது கொண்டிருந்த குழந்தை

உக்ரைனில் மகன் கண்முனே தான் துப்பாக்கி முனையில் சீரழிக்கப்பட்ட சம்பவம் குறித்தும் கணவர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாகவும் இளம்தாயார் அதிர்ச்சியுடன் விவரித்துள்ளார். இந்த சம்பவமானது கடந்த 8ஆம் திகதி நடந்துள்ளது. இது குறித்து 33 வயதான பெண் கூறுகையில், எங்கள் கிராமத்துக்குள் ரஷ்ய துருப்புகள் நுழைந்தனர். அதில் இரண்டு வீரர்கள் எங்கள் வீட்டிற்குள் வந்தனர். ஏன் இங்கு வருகிறீர்கள் என என் கணவர் கேட்ட நிலையில் அவரை சுட்டு கொன்றனர். பின்னர் அழுது கொண்டிருந்த என் குழந்தையின் … Read more

சொத்து வரி செலுத்தாக சென்னை ஆல்பர்ட் தியேட்டர் ‘ஜப்தி’! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: சொத்து வரி செலுத்தாக பிரபல தியேட்டரான ஆல்பர்ட் தியேட்டருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்து, ஜப்தி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு சொத்து வரியை வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள வரிகளையும் வசூலிக்க அறிவுறுத்தி உள்ளது. அதன்பேரில் சென்னையிலும் சொத்து வரியை வசூலிக்க ஆங்காங்கே முகாம்களை சென்னை மாநகராட்சி அமைத்து வரி வசூலை தீவிரப்படுத்தி உள்ளது. 2021-ம் ஆண்டுக்கான 2வது தவணைக்கான வரி கட்டுவதற்கு இன்றே (மார்ச் 31ந்தேதி) கடைசி … Read more

விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு- கைதானவர்களை மருந்து குடோனுக்கு அழைத்து சென்று விசாரணை

விருதுநகர்: விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது, பிரவீன், மாடசாமி ஆகிய 4 பேர் மற்றும் 4 சிறுவர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர் மதுரை மத்திய சிறையிலும், சிறுவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். விருதுநகர் பாண்டியன்நகர் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்டிருந்த இந்த வழக்கு, முதலமைச்சர் உத்தரவைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் … Read more

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சராக இருந்தபோது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கல்வி, அரசு வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் அந்த சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்யப்பட்டன. … Read more

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0: 535 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து வரும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடவடிக்கையில் 535 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 28-ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 550 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 37 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுடன் விடை பெறுகிறது கொரோனா காலக் கட்டுப்பாடுகள்!

புதுடெல்லி: தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதால், நாட்டில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் இன்று முதல் விலக்கிக் கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தலை தொடர்ந்து பின்பற்றும்படி மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதல் முதலாக பரவிய கொரோனா வைரஸ், உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி, பலத்த உயிர்ச் சேதம், பெரும் பொருளாதார இழப்புகள் … Read more

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு சட்டம் செல்லாது – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் சீர்மரபினருக்கு மொத்தமாக 20 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இதில் வன்னியர் சமூகத்தினருக்கு மட்டும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு பிப்ரவரி … Read more