சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 14 ஆயிரமாக குறைவு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 14,307 ஆக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,225 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,21,982 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,594 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,89,004 ஆனது. தற்போது 14,307 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக … Read more

அஸ்வின் குமாரின் ஆல்பம் பாடலை வெளியிட்ட சிம்பு !!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிய நடிகர் அஸ்வின் குமார் 2014 ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் பல்வேறு துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் வெளியானது . மேலும் 'குட்டி பட்டாஸ்' மற்றும் அடிப்பொலி உள்ளிட்ட பல ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் குமார் நடிப்பில் அடுத்து ” பேபி நீ சுகர் ” எனும் புதிய ஆல்பம் பாடல் தயாராகியுள்ளது. இந்த பாடலில் அஸ்வினுக்கு … Read more

பான் – ஆதார் எண் இணைக்க மார்ச் 2023 வரை காலக்கெடு நீட்டிப்பு.. ஆனா ஒரு கண்டிஷன்..!

பான் எண் மற்றும் ஆதார் எண் இணைக்க மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி எனப் பலமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது மத்திய நேரடி வரி வாரியம் மிகவும் முக்கியமான அறிவிப்பை சில கட்டுப்பாடுகள் உடன் வெளியிட்டுள்ளது. மார்ச் 31, 2022ஆம் தேதிக்குள் பான் எண் மற்றும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்தக் காலக்கெடுவை மார்ச் 31, 2023 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆதார் பான்-ஐ ஆன்லைனில் … Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தில் மட்டக்களப்பு கல்வி வலயம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வின் படி மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில், இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வலயக் கல்விப் பணிப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையிலுள்ள 100 கல்வி வலயங்களுள் மட்டக்களப்பு கல்வி வலயம் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து 2,050 … Read more

‘மரியாதையான தமிழில் என்னை திட்டுங்கள்’ ஒருமையில் பேசிய நாஞ்சில் சம்பத்துக்கு தமிழிசை வேண்டுகோள்!

சமூக வலைதளங்களில் யாரையாவது விமர்சித்தாலும், தமிழ் மொழியை மரியாதையுடன் பயன்படுத்த வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார். தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாரதியார் நினைவு சர்வதேச மாநாட்டில் தமிழிசை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் திமுகவைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் தன்னை அவதூறாகப் பேசியதை மறைமுகமாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் மக்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். … Read more

சுங்கக் கட்டணங்களை உயர்த்தி மக்களை வதைப்பது எந்த வகையில் நியாயம்? டிடிவி தினகரன் காட்டம்.!!

மத்திய நெடுஞ்சாலைத் துறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்க சாவடிகளில் கட்டணத்தை உயர்கிறது. அதன்படி சென்னை வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ரூபாய் 10 முதல் ரூபாய் 40 வரை கட்டணத்தை உயர்த்த போவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.  சுங்க கட்டண உயர்வுக்கு மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன்,  உரிமம் காலாவதியான சுங்கச் சாவடிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை … Read more

அண்ணா சிலை அகற்றப்படுகிறதா?! – கொதித்த திமுக கவுன்சிலர்கள்… தஞ்சாவூர் மாநகராட்சியில் நடந்தது என்ன?

தஞ்சாவூரின் மைய பகுதி என சொல்லப்படுகிற பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதால் சிலையினை அகற்றி அருகிலேயே உள்ள சுதர்சன சபா இடத்தில் மாற்றியமைக்கலாம் என திமுக மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடந்த மாமன்ற கூட்டத்தில் அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த திமுக கவுன்சிலர்கள் அண்ணா சிலையை அகற்ற கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா சிலை தஞ்சாவூரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு … Read more

கொடைக்கானலில் 110 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை.. சதமடித்த டீசல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் டீசல் விலை நூறு ரூபாயை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, எரிபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில், சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. மலைப் பிரதேசமான கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110ரூபாய் 36 காசுகளுக்கும், டீசல் 100ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சமவெளி பகுதிகளை விட மலைப்பகுதிகளுக்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களை கொண்டு … Read more

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புது டெல்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இப்பிரிவுக்குள் வரும் வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் இட … Read more

ஜெகதாபட்டினம் மீனவர்கள் 3 பேர் கைது: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: எல்லை தாண்டி வந்தாகக் கூறி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 3 பேரை இன்று இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 102 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று (மார்ச் 30) கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த விஸ்வலிங்கம்(50), சக்திவேல்(38), கலைமாறன்(29) ஆகியோர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி … Read more