மக்களில் ஒருவராக அஜித்..வைரலாகும் புகைப்படங்கள்.! எங்கு சென்றுள்ளார் தெரியுமா ?

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்புனும் அஜித்தின் படம் மூன்று வருடங்கள் கழித்து வெளியானதால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பினால் இப்படம் வசூல் சாதனை செய்தது. எனவே அஜித் தற்போது வினோத்துடன் மூன்றாவது முறையாக இணையும் படத்தின் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. வலிமை படத்திற்கு எழுந்த எதிர்மறை விமர்சனங்கள் அடுத்த படத்திற்கு வந்துவிடக்கூடாதென்று அஜித் மற்றும் வினோத் கடுமையாக உழைத்துக்கொண்டு வருகின்றனர். ஒரு முடிவுக்கு வராத தளபதி 66 …குழப்பத்தில் … Read more

குண்டுமழை பொழியும் ரஷ்யா.. உக்ரைன் குற்றச்சாட்டு.!

உக்ரைனில் படைகளைப் பின்வாங்கிக் கொள்வதாக ரஷ்யா அறிவித்த பகுதிகளிலும், மற்ற பகுதிகளிலும் ரஷ்ய ராணுவம் போர் விமானங்கள் மூலம் குண்டுமழை பொழிந்து வருவதாகவும், தாக்குதலை அதிகரித்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் ஒரு மாதக் காலத்துக்கு மேல் நீடிக்கிறது. இரு நாட்டுக் குழுவினரின் பேச்சுவார்த்தைக்குப் பின் நல்லெண்ண நடவடிக்கையாகக் கீவ், செர்னிகிவ் ஆகிய நகரங்களில் இருந்து ரஷ்ய ராணுவத்தினரைப் பின்வாங்கிக் கொள்வதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. அது ரஷ்யாவுடனான போரில் திருப்புமுனை … Read more

இந்தியா-துபாய் இடையே விமானக் கட்டணம் குறைப்பு.!

இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் விமானக் கட்டணங்கள் குறைந்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விமான சேவைகளுக்கு கடந்த 27 ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, தேவை காரணமாக இரு நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும். டெல்லியில் இருந்து செல்லும் விமானங்களில் அதிகபட்ச கட்டணம் 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்தில் பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் … Read more

அணு ஆயுதங்களுடன் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்: திடுக்கிடவைக்கும் ஒரு தகவல்

ஒரு பக்கம் உக்ரைனுடன் போரிட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் மற்றொரு நாட்டை மிரட்டுவதற்காக, அந்நாட்டு வான் எல்லைக்குள் அணு ஆயுதங்களுடன் ரஷ்ய போர் விமானங்கள் நுழைந்துள்ள செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதம் (மார்ச்) 2ஆம் திகதி, நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடன் நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன. உடனடியாக ஸ்வீடன் விமானப்படை இரண்டு போர் விமானங்களை அனுப்ப, அவை சென்று அந்த ரஷ்ய விமானங்களை புகைப்படம் எடுத்துள்ளன. அப்போதுதான் ஒரு திடுக்கிடவைக்கும் தகவல் தெரியவந்துள்ளது. … Read more

வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் ரத்து சரியே! உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் தமிழகஅரசின் சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியே என உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகமான வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் மாநில இடஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரண … Read more

கேரளாவில் அன்னாசி, பலா, வாழை பழத்தில் இருந்து குறைந்த போதை தரும் மது தயாரிக்க அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில் பழ வகைகளில் இருந்து குறைந்த போதை தரும் மது வகைகளை தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக ஆலோசிக்க முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் புதிய மது கொள்கைக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. புதிய மது கொள்கையில் கேரளாவில் மது தேவை அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்த தேவையை ஈடுகட்டும் வகையில் கூடுதல் மது உற்பத்தி ஆலைகள் … Read more

கர்ப்பிணி பெண் சாவு: கொலை வழக்கு போட்டதால் உருக்கமான கடிதம் எழுதி வைத்து பெண் டாக்டர் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் அர்ச்சனா சர்மா. இவர் தனது கணவருடன் சேர்ந்து ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இந்த ஆஸ்பத்திரியில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் அர்ச்சனா சர்மா பிரசவம் பார்த்தார். அந்த பெண்ணிற்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பெண் சிசிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதனால் அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். கர்ப்பிணி பெண் சாவுக்கு டாக்டரின் தவறான சிகிச்சையே காரணம் என அவர்கள் … Read more

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 5 செ.மீ. மழை பதிவு

நீலகிரி: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 5 செ.மீ. மழை பதிவாகியது. கின்னகோரையில் 4 செ.மீ. மழையும், சோலையாறில் தலா 2 செ.மீ. மழையும், போடிநாயக்கனூரில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை…10.5% உள் ஒதுக்கீடு செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

புதுடெல்லி: தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை ரத்து செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த முறை ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், … Read more

நெடுந்தீவு அருகே புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச்சென்றனர். நெடுந்தீவு அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, ஒரு விசைப்படகையும் அதில் இருந்த 3 மீனவர்களையும் கைது செய்தது. கைது செய்யப்பட்ட 3 மீனவர்களையும் இலங்கையிலுள்ள மயிலிட்டி துறைமுகத்துக்கு அந்த நாட்டின் கடற்படை கொண்டு … Read more