இலங்கை அதிபர் இல்லம் முற்றுகை- வன்முறையால் கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்

கொழும்பு : வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கிற நிலை உருவாகி உள்ளது.  மேலும் மின் உற்பத்திக்காக அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் மின் விநியோகத்தில் 750 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொழும்பு நகரில் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு காணப்படுகிறது.  இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இல்லத்தை … Read more

அதிமுக ஆட்சியில் 10.5% ஒதுக்கி அரசாணை வன்னியர் உள்ஒதுக்கீடு செல்லாது: மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி: சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு உள் இடஒதுக்கீடுகளை வழங்கக் கூடாது. எனவே, அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கிய அரசாணையை ரத்து செய்யப்படுவதாக மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி கடந்தாண்டு பிப். 26ம் தேதி அப்போதைய அதிமுக அரசால் சட்டம் இயற்றப்பட்டது. இது அரசியல் உள்நோக்கத்தோடு அவசர கதியில் உருவாக்கப்பட்டது. … Read more

கோத்தகிரி: இரண்டு சிறுத்தைகள் உயிரிழப்பு – வனத்துறை விசாரணை

கோத்தகிரியில் வனத்துறையினர் ரோந்து மேற்கொள்ளும்போது இரண்டு சிறுத்தைகள் இறந்து கிடந்துள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோத்தகிரி அடுத்துள்ள கீழ் கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட தேனாடு பிரிவு மூன்றாவது காப்புகாட்டிற்குள் வனத்துறையினர் ரோந்து மேற்கொள்ளும்போது சுமார் 7 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுத்தையும், அடையாளம் காணமுடியாத மற்றொரு சிறுத்தையும் இறந்து கிடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் போஸ்லே, உதவி வன பாதுகாவலர் சரவணக்குமார், வனச்சரகர் சிவா தலைமையிலான வனத்துறையினர் … Read more

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் மாற்றமில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி- ‘புதிய நிதியாண்டின் முதல் காலாண்டில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை’ என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதிய நிதியாண்டு இன்று துவங்குகிறது. இதில், ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில், என்.எஸ்.சி., எனப்படும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம், பி.பி.எப்., எனப்படும் பொது சேமநல நிதி திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியில், எந்த மாற்றமும் … Read more

அமெரிக்க பார்லிமென்டில் தேசிய சீக்கிய தின மசோதா| Dinamalar

வாஷிங்டன்-ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதியை, தேசிய சீக்கிய தினமாக கொண்டாடும் மசோதா, அமெரிக்க பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில், இந்திய வம்சாவளிகள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். குறிப்பாக, சீக்கிய மக்கள், கடந்த 100 வருடங்களாக அதிக எண்ணிக்கையில் இங்கு குடிபெயர்கின்றனர். இவர்கள் அமெரிக்காவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.இந்நிலையில், சீக்கிய சமூகத்தினரை கவுரவிக்கும் வகையில், ஆண்டு தோறும் ஏப்ரல் 14ம் தேதியை, தேசிய சீக்கிய தினமாக கொண்டாடும் மசோதா, அமெரிக்க பார்லிமென்டின் மக்கள் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் … Read more

ஜன கன மன – ஒரே தலைப்பில் மூன்று வெவ்வேறு படங்கள்

ஒரே தலைப்பில் வெவ்வேறு மொழிகளில் படங்கள் வருவது எப்போதோ ஒரு முறைதான் நடக்கும். ஆனால், ஒரே தலைப்பில் தற்போது மூன்று மொழிகளில் வெவ்வேறு படங்கள் தயாராகி வருகிறது. தமிழில் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, டாப்ஸீ மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயர் 'ஜன கன மன'. மலையாளத்தில் டிஜோ ஜோஸ் ஆன்டனி இயக்கத்தில் பிருத்விராஜ், மம்தா மோகன்தாஸ், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயர் 'ஜன கன மன'. இப்படம் ஏப்ரல் 28ம் தேதி … Read more

வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம் நிறைந்த பகுதிகளின் பரப்பளவு குறைப்பு – மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி, நாகாலாந்து, மணிப்பூர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்ட பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள பதற்றம் நிறைந்த பகுதிகளின் பரப்பளவை குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் அசாமில் 23 மாவட்டங்களிலும், மணிப்பூரில் 6 மாவட்டங்களிலும், நாகாலாந்தில் 7 மாவட்டங்களிலும் ஆயுதப்படை சிறப்பு சட்டம் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இந்த மாநிலங்களில் பாதுகாப்பு சூழலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் துரிதமான வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக … Read more

ராகுல்- டி காக் ஜோடி சிறப்பான ஆட்டம் ; இமாலய இலக்கை துரத்தும் லக்னோ அணி..!!

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 1 … Read more

பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுத்த அமெரிக்கா… தவறுதலாக குறிப்பிட்ட இம்ரான் கான்

லாகூர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த சூழலில், அதன்மீது வருகிற 3ந்தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.  இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும். இந்த நிலையில் அந்நாட்டு மக்களிடையே கான் உரையாற்றினார்.  அவர் இன்று பேசும்போது, நான் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியபோது, இந்த உலகமும், என்னுடன் கிரிக்கெட் விளையாடியவர்களும் நான் கடைசி பந்து வரை விளையாடிய நிகழ்வை பார்த்துள்ளனர்.  என் … Read more