முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமானார்
முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமானார் . கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் காலமாகியுள்ளார். இறக்கும் போது அவருக்கு 91 வயது. அவர் 1989 ஆம் ஆண்டு கேகாலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இவர் ,பல அமைச்சு பொறுப்புக்களை வகித்துள்ளார். இவர் 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி பிறந்தார்.