நாட்டின் மேல், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மாத்தறை மாவட்டங்களிலும் வழமையான வெப்ப நிலையை விட அதிகமாகவும், உடல் வெப்பநிலை வழமை நிலையிலும் விட அதிகரிக்கும் நிலையில் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெப்ப சுட்டெண் எதிர்பார்க்கப்பட்ட ஈரப்பதன் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி வானிலை ஆய்வு திணைக்களத்தால் கணக்கிட்டு இதனை தெரிவித்துள்ளது..
இது உலகளாவிய எண்ணியல் வானிலை எதிர்வு கூறல் மாதிரிகளின் தரவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. மனித உடலில் வெப்பக் குறியீட்டின் தாக்கம் கீழ்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இதுகுறித்து அவதானத்துடன் செயல்படவேண்டும்இதேபோன்று குழந்தைகள் சிறுவர்கள் தொடர்பிலும் கூடுதலான கவனம் செலுத்துவதுடன் கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை தவிர்ப்பதுடன் நிழலைக் கண்டறிந்து குளிர்மையான இடங்களில் இருப்பதையும் உறுதி செய்துக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
வெப்ப நிலைக்கு ஏற்றவாறு இலகுவான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிவது சிறந்தது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சின் பேரிடர் தயார்நிலை மற்றும் பதிலளிப்புப் பிரிவினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளையும் கருத்தில் கொள்ளவும்.
மேலும் விளக்கங்கள் தேவை எனின் 011 -7446 491 என்ற தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ள முடியும்.