நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த வாகனம் மீது இன்று முட்டை வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த வேளை இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவர் ஆளுங்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.