கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலியா வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் ஆணையர் டாக்டர் மோனிகா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆஸ்திரேலியாவில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் இருப்பதாகவும் கடந்த 2 ஆண்டுகளாக உயர்கல்வி சேருவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில், தற்போது அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி சேர ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவிலிருந்து வரும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார்.