Viral video of robo dog patrols empty streets: உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. ஷாங்காய் நகரில் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் மிகக் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்ற சூழலில், ரோபா நாய் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காட்சிகள் நமக்கு ஹாலிவுட் படத்தை நியாபகப்படுத்துகிறது.
சமீபத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் சீனாவில் உள்ள மிகப்பெரிய நகரும், வணீக தலைநகருமான ஷாங்காயில் கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த நபர் 10 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஸ்டன் டைனமிக்ஸ் ஸ்பாட்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட நான்கு கால்களைக் கொண்ட ரோபோ ஒன்று யாரும் இல்லாத சாலையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தன்னுடைய தலைக்கு மேல் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ந்து கொரோனா நடத்தை விதிமுறைகள் குறித்து அறிவித்துக் கொண்டே இருக்கிறது அந்த நாய். முகக்கவசம் அணியவும், கைகளை நன்றாக கழுவவும், உங்களின் உடல் வெப்பநிலையை சோதிக்கவும் என்று கூறும் இந்த ரோபோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.