இந்தியா, நேபாளம் இடையிலான பயணிகள் ரயில் சேவையை பிரதமர் மோடி, நேபாள பிரதமர் ஷெர் பகதுர் துயுபா கூட்டாக இணைந்து நாளை துவக்கி வைக்கின்றனர்.
இந்தியா, நேபாளம் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் 784 கோடி ரூபாய் மதிப்பிட்டில் ரயில்வே பணிகள் நடைபெற்றன. பீகார் மாநிலம் ஜெய்நகரில் இருந்து நேபாளம் குர்தா இடையிலான 35 கிலோ மீட்டர் தூர பயணிகள் ரயில் சேவைக்கான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் நாளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
1937 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ஜெய்நகரில் இருந்து நேபாளம் Bijalpura நகருக்கு ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில் கனமழை வெள்ளம் காரணமாக கடந்த 2ஆயிரத்து 1ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. ஏறத்தாழ 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரயில் சேவை துவக்கப்பட உள்ளது.