இனி இனம், மதம், சாதி அல்லது கட்சி அரசியல் அடிப்படையல் இனி நாம் பிளவுப்படக்கூடாது என இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ஜனாதிபதி இல்லம் மற்றும் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இலங்கையர்களான நாம் கடந்த மாதம் அமைதியாக ஒன்றாக அவதிப்பட்டோம். அனைத்திற்கும் மற்றும் அனைவருக்கும் பொறுமை இழக்கும் கட்டம் இருக்கிறது.
நாம் அந்த கட்டத்தை எட்டிவிட்டோம். நேற்றைய போராட்டம் அப்பாவி மக்களின் துன்பம் மற்றும் நியாயமற்ற அடக்குமறையின் வெளிப்பாடு.
ரஷ்ய மீதான உக்ரைன் வான்வழித் தாக்குதல் இதற்கு வழிவகுக்கும்! புடின் அரசு காட்டம்
இனம், மதம், சாதி அல்லது கட்சி அரசியல் அடிப்படையல் இனி நாம் பிளவுப்படக்கூடாது. ஒரே மக்கள் என்ற அடிப்படையில் நான் ஒன்றிணைய வேண்டும் மற்றும் வரும் தலைமுறை, நமது குழந்தை மற்றும் நமக்காக மீண்டெழ வேண்டும்.
#WakeUPSriLanka pic.twitter.com/hZO8tD2lbY
— Sanath Jayasuriya (@Sanath07) April 1, 2022
இது அவர்களுக்கானது அல்ல, இது நமக்கானது. அமைதியாக போராடுங்கள், பொது சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் மற்றும் தயவுசெய்து சக சகோதரர்கள் அல்லது சகோதரிகளை காயப்படுத்த வேண்டாம்.
இது கலவரம் பற்றியது அல்ல. இது சரியான ஒரு நிலைப்பாட்டை எடுப்பது பற்றியது என சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.