அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது பேருவளை நகரிலும் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சார தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.