2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் துடுப்பாட காலத்தில் இறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் 1 ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு ஜோடி சேர்ந்த தவான் – ராஜபக்சா அதிரடியாக விளையாட தொடங்கினர். ஆனால் இந்த ஜோடி வெகு நேரம் நிலைக்கவில்லை.
ராஜபக்ச 9 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்து மாவி பந்துவீச்சில் சௌதீ-யிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதை தொடர்ந்து ஷிகர் தவான் 16 ஓட்டங்களில் சௌதீ பந்துவீச்சில் வெளியேறினார்.
இதன் பிறகு களமிறங்கிய லிவிங்ஸ்டன் 19 ஓட்டங்களில் வெளியேறினார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய ஷாருகான் மற்றும் ராகுல் சஹர் டக் அவுட்டாகி வெளியேறினர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரபாடா கடைசி நேரத்தில் வாணவேடிக்கை காட்டினார்.
அதிரடியாக விளையாடிய அவர் 16 பந்துகளில் 25 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 137 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட்டாகியது.
கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். டிம் சவுத்தி 2 விக்கெட், சிவம் மவி, சுனில் நரைன், ரஸ்ஸல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 138 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியுள்ளது.