கொரோனா காலத்தில் லாக்டவுன் காரணமாக வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வந்தனர். குறிப்பாக மூத்த குடிமக்கள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தனர். அந்தசமயத்தில் மூத்த குடிமக்களுக்கு பயன்படும் வகையில் சில முன்னணி வங்கிகள் சிறப்பு டெபாசிட் திட்டங்களை அறிமுகம் செய்தன.
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..!
இதன் மூலம் மூத்த குடிமக்கள் வழக்கத்தினை விட கூடுதலாக வட்டி பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இது மூத்த குடிமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினையும் பெற்றது. இதன் காரணமாக தற்போது கொரோனாவின் தாக்கத்தில் இருந்து நாடுகள் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையிலும், இன்னும் சிறிது காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.
காலக்கெடு நீட்டிப்பு
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின்சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டி திட்டமானது செப்டம்பர் 30, 2022 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே போல நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயும் இந்த திட்டத்தினை செப்டம்பர் 30, 2022 வரையில் நீட்டித்துள்ளது. இது மூத்த குடிமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
எஸ்பிஐ வீகேர் திட்டம்
எஸ்பிஐ வீகேர் திட்டம் மூத்த குடி மக்களுக்கு சாதாரண டெபாசிட்களுக்கு வழங்கப்படுவதை காட்டிலும் 80 அடிப்படை புள்ளிகள் அதிகமாக வழங்குகிறது. ஏற்கனவே சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தினை விட மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகம் வழங்கப்படுகிறது, இந்த வீகேர் திட்டத்தின் மூலம் இன்னும் கூடுதலாக 30 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து மொத்தம், 80 அடிப்படை புள்ளிகள் கூடுதலாக வட்டி கிடைக்கிறது.
எஸ்பிஐ வீகேர் திட்டம் வட்டி விகிதம்
சாதரண டெபாசிட் திட்டங்களுக்கு 2 கோடி ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு, 5 – 10 ஆண்டுகால முதிர்வு காலம் உடைய திட்டங்களுக்கு 5.50% ஆக வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது. இதில் மூத்த குடிமக்களுக்கு இந்த சிறப்பு திட்டங்களுக்கு 80 அடிப்படை புள்ளிகள் அதிகமாக 6.30% வட்டி விகிதம் கிடைக்கிறது. இதே 5 ஆண்டு வரையிலான டெபாசிட் திட்டங்களுக்கு சாதாரண டெபாசிட் திட்டத்தினை விட 50 அடிப்படை புள்ளிகளே அதிகம். இந்த வட்டி விகிதம் புதியதாக டெபாசிட் செய்பவர்கள் அல்லது டெபாசிட்டினை ரீனிவள் செய்பவர்களுக்கும் பொருந்தும். இந்த வட்டி விகிதம் 15.02.2022ல் இருந்து பொருந்தும்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டி
ஹெச்.டி.எஃப்.சி வங்கி சீனியர் சிட்டிசன் கேர் எஃப் திட்டத்தினை மீண்டும் செப்டம்பர் 30, 2022 வரையில் நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தில் சாதாரண வைப்பு நிதி திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தினை காட்டிலும், சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டங்களில் இன்னும் கூடுதலாக 0.25% வட்டி வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் சாதாரண பொதுமக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களை விட, இந்த திட்டத்தில் 0.75% கூடுதலாக வட்டி வழங்கப்படுகின்றது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டி வட்டி
ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் சாதரண டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் 5 வருடம் 1 நாள் முதல் 10 வருடம் வரையில், 5.60% வழங்கப்படுகின்றது. இதில் சாதாரணமாக மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகம் கிடைக்கிறது. இதே சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டி திட்டத்தில் வட்டி இன்னும் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.35% ஆக கிடைக்கிறது. இதே மற்ற திட்டங்களுக்கு சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் வட்டியை விட 50 அடிப்படை புள்ளிகளே அதிகம் வழங்கப்படுகின்றது.
SBI & HDFC bank extends special FD scheme for senior citizens
SBI & HDFC bank extends special FD scheme for senior citizens/எஸ்பிஐ & ஹெச்டிஎஃப்சி வங்கியின் சூப்பர் அறிவிப்புகள்.. யாருக்கு என்ன பலன்?