கள்ளக்குறிச்சி அருகே தொடக்கப்பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக அப்பள்ளியின் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.
வானவரெட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தவன் துளசிராமன். தன்னிடம் படிக்கும் 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு துளசிராமன் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும் அதனால் சில மாணவிகள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அதுகுறித்து மாணவிகளின் பெற்றோருக்குத் தெரியவந்த நிலையில், துளசிராமன் 10 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளான். 10 நாட்கள் கழிந்த நிலையில், விடுப்பை நீட்டிக்க மீண்டும் பள்ளிக்கு வந்த துளசிராமனை, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.