கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் வீடு ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறிய வீடியோ காட்சிகள்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் வீடு ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறிய காட்சிகள் வெளியாகியுள்ளன. குரும்பலூர் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவரது காங்கிரீட் வீட்டுக்குப் பின்புறம் கீற்றுக் கொட்டகை அமைத்து சமையற்கூடமாகப் பயன்படுத்தி வந்தனர்.

நேற்று இரவு 9 மணியளவில் பால் காய்ச்சுவதற்காக கேஸ் அடுப்பைப் பற்றவைத்தவர்கள், பால் வைத்ததை மறந்து அவசரமாக வெளியே சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் அந்தக் கொட்டகை தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. உள்ளே இருந்த கேஸ் சிலிண்டரும் பெரும் சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

பால் பொங்கி வழிந்து அடுப்பு அணைந்து, கேஸ் மட்டும் வெளியேறி இருக்கலாம் என்றும் கொட்டகை முழுவதும் கேஸ் பரவி, அங்கு செயல்பாட்டில் இருந்த மின் சாதனங்கள் மூலமோ அல்லது வேறு காரணிகள் மூலமோ தீப்பிடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.