உக்ரைன் தலைநகர் கீவ் அருகே பயங்கர மோதல் வெடித்துள்ளதாக அந்நகர மேயர் Vitali Klitschko எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Vitali Klitschko கூறியதாவது, உக்ரைன் தலைநகர் கீவின் வடக்கு மற்றும் கிழக்கில் பயங்கர மோதல்கள் வெடித்துள்ளன.
கீவ் நகரில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் மிகவும் அதிகமாக உள்ளது, எனவே கீவ் திரும்ப விரும்பும் மக்கள், தயவு செய்து இன்னும் சிறிது காலம் எடுத்துக்கொள்ளுமாறு நான் அறிவுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
தலைநகரைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் ரஷ்யப் படைகள் பின்வாங்கத் தொடங்கியுள்ளன என்று கீவ் நகரின் பிராந்திய ஆளுநர் முன்னர் கூறியதை அடுத்து இது வந்துள்ளது.
இந்த வாரம் இஸ்தான்புல்லில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையின் போது, ரஷ்யா பேச்சுவார்த்தையாளர்கள் கீவ் மற்றும் Chernihiv இரண்டு நகரங்களிலும் தங்கள் நடவடிக்கைகைள கடுமையாக குறைப்பதாக உறுதியளித்தனர்.
இனி நாம் பிளவுப்படக்கூடாது! நாட்டு மக்களுக்கு இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா வெளியிட்ட செய்தி
இருப்பினும், பேச்சுவார்த்தையாளர்களின் வாக்குறுதியை மீறி ரஷ்யப் படைகள் Chernihiv-ல் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் பின்னர் வெளிவந்தன.
இந்நிலையில், தற்போது கீவ் நகரிலும் பயங்கர மோதல்கள் நடந்துவருவதாக மேயர் தெரிவித்துள்ளது, பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றும் மூலம் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை குறைத்துள்ளது.