சீனாவில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த இயந்திர நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான ஷாங்காயில் மீண்டும் தொற்று பரவுவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட இயந்திர நாய் வீதிகளில் நடந்து செல்கிறது.
தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் கூறிக் கொண்டே அந்த இயந்திர நாய் வலம் வருகிறது. இந்த நிலையில் ஷாங்காய் நகரில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளது.