இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்பது தற்போது ஏற்பட்ட ஒன்று அல்லவென பிரித்தானியாவில் இருக்கும் பொருளாதார நிபுணர் பாலகிருண்ன தெரிவித்துள்ளார்.
கோவிட் பரவல் காலப்பகுதியில் இருந்தோ, உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாகவோ இலங்யைில் பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
“இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஆரம்ப காலங்களில் இருந்தே வந்துள்ளது. விடுதலைப் புலிகளுடனான போரில் அவர்களை அழிப்பதற்காக 22 நாடுகளிடம் இருந்து பல்வேறு உதவிளை இலங்கை அரசாங்கம் பெற்றிருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கடனுக்கு இறக்குமதி செய்திருந்தது.
இவ்வாறான பின்னணியிலேயே இலங்கையில் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.