சிறுசேமிப்பு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

புதுடெல்லி:

நடப்பு 2022-23 நிதி ஆண்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக, முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் 2022 முதல் ஜூன் 2022 வரை) சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் கூறி உள்ளது. இதையொட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

* முதல் காலாண்டில் பி.பி.எப். என்னும் பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீத வட்டியும், என்.எஸ்.சி என்கிற தேசிய சேமிப்பு சான்றிதழ் நிதிக்கு 6.8 சதவீத வட்டியும் தொடரும்.

* ஒரு வருட பருவ வைப்பு திட்டத்துக்கு 5.5 சதவீத வட்டி தொடரும். பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்குக்கு 7.4 சதவீத வட்டி வழங்கப்படும்.

* மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்பு திட்டத்துக்கு 7.4 சதவீத வட்டி நீடிக்கும்.

* சேமிப்பு கணக்குகளுக்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கும்.

* 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 5.5 சதவீதம் முதல் 6.7 சதவீதம் வட்டி காலாண்டுக்கு கிடைக்கும்.

* 5 ஆண்டு தொடர் வைப்புகளுக்கு 5.8 சதவீத வட்டி வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.