சீனா ஆபத்தில் உள்ளது! ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் எச்சரிக்கை


 சீனாவின் நற்பெயர் ஆபத்தில் உள்ளது என ஐரோப்பிய ஆணையத்தில் தலைவர் Ursula von der Leyen எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில், சர்வதேசத் தடைகளைத் தவிர்க்க ரஷ்யாவுக்கு உதவினால் சீனாவின் நற்பெயருக்கு ஆபத்து என ஐரோப்பிய ஆணையத்தில் தலைவர் Ursula von der Leyen எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத்தில் தலைவர் Ursula von der Leyen ட்விட்டரில் பதிவிட்டதாவது, சீனாவின் நற்பெயர் ஆபத்தில் உள்ளது.

இது நீண்ட கால முதலீடுகள் மீதான நம்பிக்கை, நம்பகத்தன்மை மற்றும் முடிவுகள் பற்றியது.

நடுவானில் ரஷ்யாவின் Mi-28 ஹெலிகாப்டரை சுட்டு தவிடுபொடியாக்கிய உக்ரைன்! வெளியான வீடியோ ஆதாரம் 

ஒவ்வொரு நாளும் ஐரோப்பிய ஒன்றியம், சீனா இடையே நடக்கும் வர்த்தக்த்தின் மதிப்பு சுமார் 2 பில்லியன் யூரோ.

ரஷ்யா-சீனா இடையே நடக்கும் வர்த்தகம் 330 மில்லியன் யூரோ.

போர் நீடிப்பதையும் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் மேலும் சீர்குலைவு ஏற்படுவதையும் யாரும் விரும்பவில்லை என Ursula von der Leyen தெரிவித்துள்ளார்.                



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.