சுகாதார சேமிப்பு கணக்கு என்றால் என்ன.. இதனால் என்ன பயன்.. யாரெல்லாம் தொடங்கலாம்..!

கடந்த சில காலாண்டுகளாகவே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மிக அதிகமாகவே இருந்து வருகின்றது. மக்கள் பெரும்பாலும் மருத்துவ கட்டணங்களை செலுத்த இன்சூரன்ஸ் திட்டங்களையே நம்பியுள்ளனர்.

ஆனால் தற்போது சுகாதார சேமிப்பு கணக்குகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது எனலாம். உண்மையில் சுகாதார சேமிப்பு கணக்குகள் என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன.

7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..!

பலரும் இந்த மருத்துவ செலவுக்கு இன்சூரன்ஸ் திட்டங்களே சரியான ஆப்சனாக பார்க்கப்படுகின்றனர். சுகாதார சேமிப்பி பற்றி அறிந்திருப்பதில்லை.

வரி சலுகையுள்ள ஒரு திட்டம்

வரி சலுகையுள்ள ஒரு திட்டம்

ஒரு ஹெல்த் சேமிப்பு கணக்கு என்பது ஒரு வகை வரி நன்மை பயக்கும் சேமிப்பு கணக்கு ஆகும். இது பாக்கெட்டுகளுக்கு வெளியே உள்ள மருத்துவ செலவினங்களைச் செலுத்த, உங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலங்களில் அதிகரித்து வரும் செலவுக்கு மத்தியில், இந்தியாவில் மில்லியன் கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இன்சூரன்ஸ் திட்டங்கள் ஓரளவு மருத்துவ செலவினங்களை ஈடுகட்டினாலும், மருத்துவமனைக்கு செல்லும் முன்பும், பின்பும் செலவினங்களுக்கு இன்னும் பெரிய தொகையை செலவிடுகின்றனர்.

 

எப்படி செயல்படுகிறது?

எப்படி செயல்படுகிறது?

HSA என்பது ஒரு சேமிப்பு கணக்காகும். இது அடிப்படை ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் இல்லாதவை உட்பட மருத்துவ செலவுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். மக்கள் தங்களின் பணத்தினை டெபாசிட் செய்து சுகாதாரம் தொடர்பான செலவினங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய சாதாரண கணக்கு போல இது செயல்படுகிறது.

வட்டி அதிகம்
 

வட்டி அதிகம்

இந்த சிறப்பு சேமிப்புக் கணக்கு பொதுவாக வழக்கமான சேமிப்பு கணக்குகளை விட அதிக வட்டி வழங்கப்படுகிறது. இது இன்சூரன்ஸ் திட்டத்துடன் இணைக்கப்படலாம். இந்த சேமிப்பு கணக்கில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் மருத்துவ தேவைக்காக எடுத்துக் கொள்ளலாம்.

எந்த வங்கி வழங்குகிறது?

எந்த வங்கி வழங்குகிறது?

தற்போது இந்த சிறப்பு சேமிப்பு திட்டத்தினை ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி வழங்குகிறது. இது வட்டி விகிதம் 5% மற்றும் 10 லட்சம் ரூபாய் வரையிலான இன்சூரன்ஸினையும் வழங்குகிறது. இதற்கு பிரீமியம் வருடத்திற்கு 3750 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது.

என்னவெல்லாம் கவர் ஆகும்?

என்னவெல்லாம் கவர் ஆகும்?

இந்த கணக்கு மருத்துவமனையில் சேர்க்கும் முன் 30 நாட்களுக்கும், மருத்துவமனைக்கு பிந்தைய 60 நாட்களுக்கும் கட்டணங்களை வழங்கும். இது பகல் நேர சிகிச்சையுடன் சேர்த்து வழங்கும. ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியின் ஹெல்த் பர்ஸ்ட் கணக்கின் மூலம் வாடிக்கையாளர்கள் VISA signature டெபிட் கார்டையும் பெறுகிறார்கள். இது கூடுதல் கட்டண சலுகைகளை வழங்குகிறது.

குறைந்தபட்சம் எவ்வளவு?

குறைந்தபட்சம் எவ்வளவு?

இந்த சிறப்பு சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு 25000 ரூபாய் கணக்கில் இருக்க வேண்டும். இந்த சிறப்பு கணக்கினை ஆன்லைன் அல்லது நேரிடையாகவும் சென்று தொடங்கிக் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் தங்களது பான் கார்டு, முகவரி சான்று, போட்டோ உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்க வேண்டியிருக்கும். இந்த கணக்கினஒ 21 – 55 வயதானவர்கள் தொடங்கிக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What is a health savings account? how can open it?

What is a health savings account? how can open it?/ சுகாதார சேமிப்பு கணக்கு என்றால் என்ன.. இதனால் என்ன பயன்.. யாரெல்லாம் தொடங்கலாம்..!

Story first published: Friday, April 1, 2022, 8:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.