சென்னை:
சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் முதல்கட்ட மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு போக்கு வரத்து நடந்து வருகிறது.
அடுத்து 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் தொடங்கியுள்ளன. 2-வது கட்டத்தில் 3 வழித் தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
மாதவரம் பால்பண்ணையில் இருந்து சோழிங்கநல்லூர் வரை அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் திட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது. 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை நிறைவேற்ற ஜப்பானிடம் நிதியுதவி கேட்கப்பட்டது.
அதன்பேரில் ஜப்பான் சர்வதேச கழகம் நிதியுதவி வழங்க சம்மதித்துள்ளது. நேற்று இதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி ஜப்பானில் இருந்து ரூ.4,710 கோடி நிதியுதவி கிடைக்க உள்ளது.
இதுதவிர தமிழகத்தில் பசுமை திட்டங்களுக்காக ரூ.680 கோடி கடனுதவியை ஜப்பான் வழங்கியுள்ளது.
இதையும் படியுங்கள்… சென்னையில் ஏ.சி.பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு