ஆபத்தை உணராமல் அலட்சியமாக பயணம் மேற்கொள்ளும் மாணவர்களால் சமூக ஆர்வலர்கள் பலரும் கவலையில் உள்ளனர்.
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த குமரன் நகர் பகுதியில் தடம் எண் 102 பி, பெரும்பாக்கம் முதல் பாரிமுனை வரை செல்லும் பேருந்தில், பள்ளி மாணவர்கள் படிக்கட்டு முதல் ஜன்னல் வரை ஏறி தொங்கிக் கொண்டு பயணித்துள்ளனர்.
இதனை அவ்வழியே காரில் சென்ற ஒருவர் பார்த்து பேருந்தின் முன்பு காரை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடந்துநரிடம் மாணவர்கள் தொங்கிக் கொண்டு வருவது குறித்து முறையிட்டார். அதற்கு நடத்துநர் வண்டி இல்லை நான் என்ன செய்வது என அலட்சியமாக பதிலளித்துள்ளார். பின்னர் அவர் மாணவர்களை கீழே இறங்குமாறு அறிவுறுத்திவிட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
இதனையடுத்து மீண்டும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் தொங்கியவாறு பயணத்தை தொடங்கியுள்ளனர். விபத்து ஏற்படும் முன் மாணவர்களை பாதுகாக்க பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM