புதுடெல்லி:
டெல்லியில் மாதிரி பள்ளியை பார்வையிட்ட பிறகு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்று இருக்கக் கூடிய எங்களுடைய ஆட்சி எல்லா துறைகளுக்கும் எந்த அளவு முக்கியத்துவம் தருகிறதோ அதே போல அதிகமான அளவுக்கு கல்விக்கும், மருத்துவத்துக்கும் அதிகமான முக்கியத்துவத்தை நாங்கள் தந்து கொண்டு இருக்கிறோம்.
இன்றைக்கு இந்த மாடர்ன் பள்ளி எப்படி நடந்து கொண்டிருக்கிறதோ அதே போல ஒரு பள்ளியை தமிழ்நாட்டில் விரைவில் நாங்கள் உருவாக்க போகிறோம். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த பணிகள் முடிவுற்று அந்த பள்ளியை நாங்கள் உருவாக்குகிற நேரத்தில் நிச்சயமாக டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை நாங்கள் அழைக்க இருக்கிறோம். அவரும் வருவார், வர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்… தேசத் துரோகம் செய்த 2 அதிகாரிகள் பதவிநீக்கம் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி