நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இந்த ஏற்றம் இனியும் தொடருமா? அல்லது மீண்டும் சரிவினைக் காணுமா? அடுத்து என்ன செய்யலாம்?
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் என்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சந்தைக்கு சாதகமான காரணிகள் என்ன? சர்வதேச சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
இன்று தொடக்கத்திலேயே சந்தையில் பெரியளவில் மாற்றமில்லாமல் சற்று சரிவில் தொடங்கிய நிலையில், தற்போதும் பெரியளவிலான மாற்றமில்லாமல் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது.
சுகாதார சேமிப்பு கணக்கு என்றால் என்ன.. இதனால் என்ன பயன்.. யாரெல்லாம் தொடங்கலாம்..!
சர்வதேச சந்தைகள்
ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் ரஷ்ய படைகள் பின் வாங்கிக் கொள்வதாக அறிவித்திருந்த நிலையில், ரஷ்யா படைகள் வெளியேறுவதாக கூறிய நிலையில் கூட, தாக்குதல் நடத்துவதாக கூறப்பட்டது. அதோடு ரஷ்ய படைகள் வெளியேறுவதாக கூறப்பட்டாலும் அதற்கான எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்று அமெரிக்கா எச்சரித்திருந்த நிலையில். கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சரிவிலேயே முடிவடைந்துள்ளன. இதன் எதிரொலியாக ஆசிய சந்தைகள் பலவும் இன்று சரிவிலேயே காணப்படுகின்றன. இதன் எதிரொலியே இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.
அன்னிய முதலீடுகள்
கடந்த மார்ச் 31 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 3088.73 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1145.28 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், முதலீடுகள் அதிகரித்துள்ளன.
தொடக்கம் எப்படி?
இன்று காலம் ப்ரீ ஓபனிங்கிலேயே சென்செக்ஸ் 26.13 புள்ளிகள் குறைந்து, 58,542.38 புள்ளிகளாகவும், நிஃப்டி 300 புள்ளிகள் குறைந்து 17,434.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 35.02 புள்ளிகள் குறைந்து, 58,533.49 புள்ளிகளாகவும், நிஃப்டி 10 புள்ளிகள் குறைந்து, 17,454.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1222 பங்குகள் ஏற்றத்திலும், 628 பங்குகள் சரிவிலும், 92 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
கவனிக்க வேண்டிய பங்குகள்
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் பட்டியலில் வேதாந்தா, ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ், ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், என்.சி.சி, ஓம் இன்ஃப்ரா, ஹெச்.ஜி இன்ஃப்ரா இன்ஜினியரிங், ஹெச்.டி.எஃப்.சி அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய் பங்குகளில் ஒன்றாக உள்ளது.
இன்டெக்ஸ் நிலவரம்
பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மெட்டல்ஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, பவர் கிரிட் கார்ப், பிபிசிஎல், டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹீரோ மோட்டோ கார்ப், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், டைட்டன் நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி, நெஸ்டில் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, பவர் கிரிட் கார்ப், டாடா ஸ்டீல், எம்& எம், இந்தஸ் இந்த் வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே டைட்டன் நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி, நெஸ்டில், இன்ஃபோசிஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில் சற்று சரிவில் தொடங்கிய சந்தையானது, தற்போது 10.05 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 246.4 புள்ளிகள் அதிகரித்து, 58,814.21 புள்ளிகளாகவும், நிஃப்டி 67.2 புள்ளிகள் அதிகரித்து, 17,534.35 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: indices trade little higher amid volatility; focus in Heromoto corp
opening bell: indices trade little higher amid volatility; focus in Heromoto corp/தடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. வார இறுதி வர்த்தக நாளில் என்னவாகும.. கவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப்..!