——————————————————
“தன்வினை தன்னைச் சுடும்” என்று என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் கவனித்த வகையிலேயே, சமீபமாக நான் உணர்ந்தேன்.
இலங்கையில் இறுதிப் போரை நடத்தி மக்களைக் கொன்று குவித்த ராஜபக்சே சகோதரனுடைய நிலைமை இன்றைக்கு மிகவும் மோசமாக இருக்கிறது. அதிபர் மாளிகையை நோக்கியே மக்கள் திரண்டு விட்டனர் நேற்று இரவு. இது எப்படி என்றால், பிரஞ்சுப் புரட்சியில் மேரி அண்டாய்னட்டே எதிர்நோக்கி மக்கள் சென்றது போல, சிங்கள மக்களே அந்த அதிபர் மாளிகையை நோக்கி சென்றது வேடிக்கையாக இருக்கிறது.
அதே போல, தனக்கு துணை நின்றவர்கள், தனக்கு உதவியவர்கள், தனக்கு ஏணியாக என்ற நின்றவர்களுடைய வாழ்க்கையை பாழ் படுத்திய மனிதனுடைய இன்றைய காலத்தையும் பார்க்கிறேன். எப்படியும் இயற்கையின் நிதி இருக்கின்றது. தன் வினை தன்னைச் சுடும் என்பது நிரூபனம்.
இலங்கையை மீட்ட கோட்டாபய ராஜபக்ச என்று புகழ்ந்த பெளத்த, சிங்கள மக்கள் இப்போது அந்தக் கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து இலங்கையை மீட்பதற்கான போராட்டத்தைக் கட்சிகள், தரப்புகள் கடந்து ஆரம்பித்திருக்கின்றனர்.
நேற்று மாலை முதல் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுச் சுற்றாடலில் திரண்ட இளைஞர்கள் – பெண்கள் கூட்டம் அதைத்தான் எடுத்துக்காட்டி நிற்கின்றது. ராஜபக்சக்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி பீறிட்டுக் கிளம்பத் தொடங்கியிருக்கின்றது.
நாளைமறுதினம் நாடு முழுவதிலும் ஒரே சமயத்தில் பல இடங்களிலும் போராட்டங்களுக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கையில் அதற்கிடை யில் இளைஞர், யுவதிகள் தாமாக ஒன்றுதிரண்டு ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி இந்தப் போராட்டத்தை அதிரடியாக நேற்று மாலை ஆரம்பத்திருக்கின்றார்கள்.
இலங்கையை மீட்ட கோட்டாபய ராஜபக்சே என்று புகழ்ந்த பெளத்த, சிங்கள மக்கள் இப்போது அந்தக் கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து இலங்கையை மீட்பதற்கான போராட்டத்தைக் கட்சிகள், தரப்புகள் கடந்து ஆரம்பித்திருக்கின்றனர்.
நேற்று மாலை முதல் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுச் சுற்றாடலில் திரண்ட இளைஞர்கள், பெண்கள் சூழ அதைத்தான் எடுத்துக்காட்டி நிற்கின்றது. ராஜபக்சக்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி பீறிட்டுக் கிளம்பத் தொடங்கியிருக்கின்றது.
‘தடி எடுத்தவன் தடியால் அழிவான்’ என்பார்கள். பெளத்த, சிங்களப் பேரினவாத வெறியைக் கிளப்பி, அந்த வெறி எழுச்சியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய கோட்டாபய ராஜபக்ச அதேபோன்ற மக்கள் எழுச்சியை – எதிர் புரட்சியை – வெறித்தனமான மக்கள் கோபத்தை இப்போது எதிர்கொள்ளும் துரதிஷ்ட நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 69 இலட்சம் வாக்காளர்களின் வாக்குகள் மூலம் பெற்ற ஆணை நேரத்துடன் காலாவதியாகி விட்டது என்பது கண்கூடு. ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற மக்கள் எழுச்சி ஏற்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது
ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சிக்கான வீழ்ச்சி, இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்படுகின்றது எனத் தோன்றுகின்றது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா…..
1-4-2022.