தமிழக மக்களின் நலனுக்காகவே முதல்வர் பிரதமரை சந்தித்தார் – அமை்சசர் தங்கம் தென்னரசு

Minister Thangam Thennarasu Press Meet : தமிழகத்தின ஒட்டுமொத்த நலனுக்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திததார் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 4 நாள் பயணமாக அமைச்சர்கள் சிலருடன் நேற்று டெல்லி சென்றார். அவருக்கு தமிழக எம்பிக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர் தொடர்ந்து நேற்று மாலை பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து 14 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஆகியோரை நேற்று சந்தித்த முதல்வர் ஸ்டாலின், இன்று மேலும் சில முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். தொடர்ந்து நாளை டெல்லி பாஜக அலுவலகத்திற்கு அருகில் உள்ள திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்.

இந்நிலையில், முதல்வர் டெல்லி பயணத்திற்கு முன்பு துபாய் சுற்றுப்பயணம் சென்றது, தற்போது டெல்லி பயணம் சென்றுள்ளது குறித்து எதிர்கட்சிகள் தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வருடன் டெல்லி சென்றுள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில்,

ஜிஎஸ்டியில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாக இருந்தாலும், உதய் திட்டம் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக வந்தபோதும், நீட் பிரச்சினையில், தமிழகத்தின் நலனுக்கு விரோதமான செயல்கள் நடைபெற்று அந்த மசோதா திரும்பி அனுப்பப்பட்டதற்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்தில் மசோதாவை இயற்றி குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு கூட முதுகெலும்பு இல்லாத எடப்பாடி பழனிச்சாமியின் அரசு இன்று தமிழக மக்களின் நலனுக்காக நமது கோரிக்கைகளுக்காக உரிமைக்காக, இன்று முதல்வர் டெல்லிக்கு வருவதையும், குறித்து அவர் விமர்சனம் செய்வது சிரிப்பைதான் வரவழைக்கிறது.

முதல்வர் அவர்கள் தனியாக சென்று பிரதமரை சந்திக்கவில்லை. அமைச்சர்களாக இருக்கும் எங்களையும் அவர் தன்னுடன் அழைத்துச்சென்றார். இதில் நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத்சிங் அவர்களை சந்தித்தபோது, அவர் நமது முதல்வருக்கு அளித்த மரியாதையை நான் அருகில் இருந்து பார்த்தேன். அவரிடம் நாம் வைத்த கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அவர், முதல்வரின் பணிகளை பாராட்டினார்.

இப்படி முதல்வருக்கு டெல்லியில் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் பார்த்து பொறுக்க முடியாமல், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு செய்தியாளர்களாக சந்தித்து புலம்புவத இனிமேலாவது விட்டுவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழக மக்களின் நலனுக்காக பிரதமரிடம் கோரக்கைகளை கொடுத்த முதல்வர் ஸ்டாலின், துறைவாரியாக என்ன தேவை என்பதை எடுத்து கூறியுள்ளார். இதில் தமிழகத்திற்காக கோரிக்கைகள் மட்டுமல்ல தமிழகத்திற்காக உரிமைகளும் அதில் அடங்கியுள்ளது. நமது மாநில நலனுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் நிலுவையில் இருக்கக்கூடிய திட்டங்கள், ஜிஎஸ்டி வருவாயில் நமக்கு கிடைக்கக்கூடிய பங்கு, என ஒவ்வொரு துறையாக வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக யாழ்பானத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் சார்பாக அவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். தமிழகம் மட்டுமல்லாது இலங்கை தமிழர்கள் குறித்து கோரிக்கை வைத்துள்ள தமிழக முதல்வரின் பயணத்தை கொச்சைப்படுத்துவது எதிர்கட்சி தலைவருக்கு அழகல்ல.

அதிமுக ஆட்சியில் டெல்லிக்கு வந்தவர்கள் அவர்கள் சுயநலம் சார்ந்த விஷயங்களுக்காக வந்திருப்பார்கள். தமிழகத்திற்காகவோ அல்லது தமிழக மக்களின் நலனுக்காகவோ தமிழக உரிமைகளை பாதுகாப்பதற்கோ அவர்களின் டெல்லி பயணம் அமையவில்லை. ஆனால் திமுக அரசு பதவியேற்ற இந்த 10 மாதங்களில், 3 முறை தமிழக முதல்வரும் பலமுறை அமைச்சர்களும் டெல்லிக்கு வந்துள்ளனர்.

அப்போதெல்லாம் தமிழக மக்களின் நலனுக்காக வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஒன்றிய அரசு வாக்குறுதி அளித்து்ளளனர். தற்போதைய பயணத்திலும் முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ள கோரிக்கைகளை கனிவாகவும், மிகவு் உன்னிப்பாகவும் கவனித்த பிரதமர் மோடி, அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.