டெல்லி: 3 நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிடிஐக்கு பேட்டியளித்தார். அப்போது; அனைவரும் தங்கள் தனிப்பட்ட அரசியலை ஒதுக்கிவிட்டு இந்தியாவை காக்க ஒன்றுபட வேண்டும். அகில இந்திய அளவில் கொள்கை ரீதியாக அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணியை உருவாக்க வேண்டும். பாஜகவை எதிர்க்கும் அனைத்து மாநில கட்சிகளும் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கைகோர்த்து அணியை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுகவுடன் இருப்பது போல, அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் கொள்கை ரீதியான நட்புறவை வளர்க்க வேண்டும். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நல்லுறவு உள்ளது, நீட் விவகாரத்தில் ஆளுநர் காலதாமதம் ஏற்படுத்துவது சரி இல்லை. நாட்டில் பிரதமர் மற்றும் ஜனாதிபதிகளை தீர்மானிப்பதில் திமுகவுக்கு முக்கிய பங்கு உண்டு. தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக திமுக உள்ளது; நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக உள்ளது இவ்வாறு கூறினார்.