அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிபர் இல்லத்துக்கு செல்லும் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறையாளர் குழு ஒன்று குழப்பம் ஏற்படுத்தும் வகையில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தியது.
இரும்பு கட்டைகள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல் ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டிவிட்டு அதிபர் இல்லத்தை நோக்கி பேரணியாக சென்று கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் திட்டமிட்டு தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வன்முறை பின்னணியில் தீவிரவாத குழுக்கள் உள்ளன.
சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்களை தூண்டிவிட்டு நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் இந்த கலவரம் நடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்… இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை- வன்முறையால் கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்