நியூசிலாந்து நாடாளுமன்றத் தோட்டத்தில் புதிதாக கஞ்சா செடிகள் எப்படி முளைத்தன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் ரோஜா தோட்டத்துக்கு நடுவே சில இடங்களில் கஞ்சா செடிகள் முளைத்திருந்ததால் சர்ச்சை எழுந்தது.
அது எப்படி அங்கு முளைத்து என்று மக்களிடையே சந்தகங்கள் எழுந்தது. இந்நிலையில், இது குறித்த சரியான தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்தின் பாராளுமன்ற பகுதியை சுமார் ஒரு வாரமாக ஆக்கிரமித்திருந்த எதிர்ப்பாளர்களால் விட்டுச் செல்லப்பட்ட கஞ்சாவில் இருந்து விழுந்த விதைகள் மூலமாக செடிகள் முளைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படி ஒரு சம்பவம் முதல் முறையாக நடந்துள்ளது.
2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 4 விமானிகள் பலி
கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில், நாட்டின் தடுப்பூசி ஆணை மற்றும் கடுமையான COVID-19 கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நாடாளுமனற வளாகத்தை முற்றுகையிட்டு கூடாரங்கள் அமைத்து நாட்கணக்கில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்தனர். பின்னர் இந்த போரட்டம் ஒருகாலவரத்தில் முடிவடைந்ததது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் அங்கு கஞ்சா பயன்படுத்தியதாகவும், கலவரத்தின்போது நாடாளுமன்ற தோட்டத்தில் சிதறி கிடந்ததாகவும் தோட்ட பராமரிப்பாளர் கூறினார்.
இலங்கையில் வலுக்கும் மக்கள் போராட்டம்: அவசர நிலை பிரகடனம் அறிவித்த கோட்டாபய ராஜபக்ச
Photo: Michael Neilson/NZME/Michael Neilson
இது “நாடாளுமனற வளாகத்தில் பயிரிடப்பட்ட முதல் கஞ்சாவாக இருக்கலாம்” என்று ஒரு பாதுகாவலர் கூறினார்.
இந்நிலையில், பாராளுமன்ற சபாநாயகர் உத்தரவிட்டதன்படி, இதுவரை முளைத்த அனைத்து கஞ்சா செடிகளும் களையெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு விழுந்துள்ள கஞ்சா விதைகள் இன்னும் பல வருடங்களுக்கு கூட முளைக்கலாம் என கூறப்படுகிறது. Photo: 1 News