நாட்டில் அடுத்த 74 நாட்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் கையிருப்பு உள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் டெலி தெரிவித்தார்.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரமேஷ்வர் டெலி, நாட்டில் 53 லட்சம் டன் பெட்ரோலிய பொருட்கள் கையிருப்பு உள்ளதாகவும், அதேநேரம் எண்ணெய் நிறுவனங்கள் 65 நாட்களுக்கு தேவையான பெட்ரோலியத்தை இருப்பு வைத்துள்ளதாகவும் கூறினார்.