பாகிஸ்தானில் பணவீக்கம் , கடுமையாக உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் இம்ரான் கானின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான முத்தாஹிதா குவாமி இயக்கம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து இம்ரான் கான் அரசு பெரும்பான்மை இழந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 342 எம்.பி.க்கள் உள்ள நிலையில் இம்ரான் கானுக்கு ஆதரவாக 164 எம்.பிக்கள் உள்ளனர். ஆட்சியைத் தக்க வைக்க 172 எம்.பி.க்களின் ஆதரவு தேவை
கடந்த 30-ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடிய நிலையில், நம்பிக்கை இல்லாத்தீர்மானம் மீது உடனடியாக விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் ஆளுங்கட்சி இதனை ஏற்றுக்கொள்ளாததால் அவை ஏப்ரல் 3-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. எனவே நாளை மறுதினம் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்ரான் கானின் ஆட்சியை தொடர்ந்து விமர்சித்து வரும் அவரது முன்னாள் மனைவி ரெஹாம் கான் தற்போது பாகிஸ்தானின் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்காக அவரை மீண்டும் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து ரெஹாம் கான் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இம்ரான் கான் உருவாக்கிய குழப்பத்தை சரி செய்ய நாட்டு மக்கள் ஒன்றிணைந்து நிற்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இம்ரான் கானிடம் புத்திசாலித்தனமும், திறமையும் இல்லை என விமர்சித்துள்ள அவர், இம்ரான் கான் பிரதமராகாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் சிறப்பாக இருந்திருக்கும் எனவும் கூறியுள்ளார்.
Yes Pakistan was great when you were not the PM. #الوداع_سلیکٹڈ_الوداع
— Reham Khan (@RehamKhan1) March 31, 2022
மேலும் படிக்க | பாகிஸ்தானில் ஆட்டம் காணும் இம்ரான்கானின் நாற்காலி; விரைவில் ஆட்சி கவிழ்ப்பு?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR