புது டெல்லி:
பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டை காக்க ஒன்றிணைய வேண்டும் என்றார்,
தொடர்ந்து பேசிய அவர், ஒற்றுமையே வலிமை என்பதை உணர்ந்து பாஜக அல்லாத கட்சிகளுடன் கொள்கை ரீதியான நட்பை காங்கிரஸ் கட்சி கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.