பிஎப் வட்டி குறைப்பால் மாத சம்பளக்காரர்களுக்கு 7 லட்சம் நஷ்டம்.. எப்படி தெரியுமா..?

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய டிரஸ்டி அமைப்பு 2021-22 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதங்களை 8.5% இலிருந்து 8.1% ஆகக் குறைக்கப் பரிந்துரை செய்தது மாத சம்பளக்காரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

3 மாதத்தில் 11.5 பில்லியன் டாலர் கடன்.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?!

இதை விட முக்கியமாக மத்திய அரசு தனது சிறு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் என அதிகளவினோர் நம்பினர். ஆனால் மத்திய அரசு சரியான டிவிஸ்ட் கொடுத்துள்ளது

பிஎப் வட்டி விகிதம்

பிஎப் வட்டி விகிதம்

பிஎப் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே வைத்திருப்பதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டு உள்ளது.

40 அடிப்படை புள்ளிகள்

40 அடிப்படை புள்ளிகள்

பிஎப் திட்டத்தின் மீதான முதலீட்டின் வட்டி விகிதம் 40 அடிப்படை புள்ளிகள் குறைந்தாலும், இன்றும் சிறு சேமிப்புத் திட்டங்கள் மத்தியில் அதிக லாபம் அளிக்கும் முதலீட்டுத் திட்டமாக EPF தான் உள்ளது.

சிறு சேமிப்புத் திட்டங்கள்
 

சிறு சேமிப்புத் திட்டங்கள்

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு 7.6 சதவீதம், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதம், பிபிஎப் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1 சதவீதம் இதனால் பிஎப் வைப்பு நிதிக்கு மற்ற சிறு சேமிப்புத் திட்டத்தைக் காட்டிலும் அதிகப்படியான வட்டி வருமானம் தொடர்ந்து கிடைக்கிறது.

2.5 லட்சம் ரூபாய்

2.5 லட்சம் ரூபாய்

ஈபிஎப்-ல் ஒருவர் அதிகப்படியாக வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முடியும். EPFO அமைப்பில் சுமார் 6.9 லட்சம் நிறுவனங்கள் உடன் 6.7 கோடி ஊழியர்கள் தங்களது பிஎப் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். மேலும் இந்த வட்டி குறைப்பின் மூலம் 350 கோடி ரூபாய் கூடுதலான வருமானத்தை EPFO பெறுகிறது.

40 வருட குறைவான வட்டி விகிதம்

40 வருட குறைவான வட்டி விகிதம்

மத்திய அரசு கடந்த 40 வருடத்தில் இல்லாத வகையில் பிஎப் வைப்புக்கான வட்டி விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் குறைத்து வெறும் 8.1 சதவீதம் என்ற குறைவான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் எந்த அளவுக்கு நஷ்டத்தை எதிர்கொள்வார்கள் தெரியுமா..?

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

உதாரணமாக, சுரேஷ் என்பவர் பிஎப் திட்டத்தின் கீழ் வருடம் 1.2 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, மார்ச் 2021 முடிவில் EPF கணக்கில் 10 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை வைத்திருக்கிறார். மேலும் பிஎப் கணக்கில் ஒவ்வொரு வருடமும் சம்பள உயர்வின் வாயிலாக 5 சதவீத தொகை கூடுதலாக முதலீடு செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 7 லட்சம் ரூபாய் நஷ்டம்

7 லட்சம் ரூபாய் நஷ்டம்

இதன் மூலம் 8.5 சதவீதம் அதாவது பழைய வட்டி விகித அடிப்படையில் 20 வருட முடிவில் சுரேஷ் பெறும் மொத்த பிஎப் பணம் 1.32 கோடி ரூபாய், ஆனால் இதுவே தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 8.1 சதவீத வட்டி விகிதம் மூலம் சுரேஷ் பெறும் தொகை 1.25 கோடி ரூபாய் மட்டுமே. இதன் மூலம் சுமார் 7 லட்சம் ரூபாய் இழப்பு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

provident fund 8.1 percent interest rate cut salaried employee may lose 7 lakhs

How provident fund 8.1 percent interest rate cut impact salaried employee பிஎப் வட்டி குறைப்பால் மாத சம்பளக்காரர்களுக்கு 7 லட்சம் நஷ்டம்.. எப்படித் தெரியுமா..? provident fund 8.1 percent interest rate cut lead salaried employee may lose 7 lakhs

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.