டெல்லி: கர்நாடகாவில் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் கட்சியினர் பணியாற்ற வேண்டும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர்; பெங்களுருவில் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய போது இவ்வாறு தெரிவித்தார். தற்போது உள்ள பாஜக மக்கள் விரோத அரசு என்றும் அவர் தெரிவித்தார். பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்த பாஜக வரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டிய கட்சி ஆகும் என ராகுல் கூறினார்.தேர்தலில் வெற்றி என்ற நிலைப்பாடு என்று மட்டும் இல்லாமல் குறைந்தது 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இயற்கையாகவே காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகாவில் பலம் உள்ளது. கர்நாடக காரன்கிராஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் 60 லட்சம் பேர் கட்சியில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள், பெண்கள் என குறிப்பிட்டார். கர்நாடக பாஜக ஆட்சியில் அனைத்து அரசு பணிகளுக்கும் 40% கமிஷன் வாங்கப்படுவதாக ராகுல் குற்றம் சாட்டினார். ஊழலில் கொடிகட்டி பறந்து வரும் பாஜக அரசு பற்றி மோடி வாய் திறக்க மாட்டார் என்றும் சாடினார்.