பிரச்சனைகளை ராஜதந்திரம் மூலம் தீர்க்க இந்தியா ஆதரவு – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையேயான சந்திப்பு கடினமான சர்வதேச சூழலில் நடைபெறுகிறது என்பதை ஒப்புக்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், புதுடெல்லி “எப்போதும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஆதரவாக உள்ளது” என்று கூறினார்.

இந்த சந்திப்பின் போது ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்திய மற்றும் ரஷ்ய இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் நட்பு என்பது முக்கிய வார்த்தை என்று கூறினார். கடந்த சில நாட்களில் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்களைக் குறிப்பிட்டு, “நம்முடைய மேற்கத்திய சக வெளியுறவு அமைச்சர்கள் ஒரு அர்த்தமுள்ள சர்வதேச பிரச்சினையை உக்ரைனில் நெருக்கடி என்று குறைக்க விரும்புகிறார்கள்” என்று கூறினார்.

இரு வெளியுறவு அமைச்சர்களும் தங்கள் சந்திப்பைத் தொடங்கிய நிலையில், “எங்கள் நிலைப்பாடு உங்களுக்குத் தெரியும், நாங்கள் எதையும் மறைக்க மாட்டோம்… இந்தச் சூழ்நிலையை இந்தியா முழுவதுமாக எடுத்துக்கொள்வதை நாங்கள் பாராட்டுகிறோம், ஒருதலைப்பட்சமாக அல்ல” என்று லாவ்ரோவ் கூறினார்.

பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் உடன் வியாழக்கிழமை நடந்த சந்திப்பின்போது ஜெய்சங்கரின் கருத்துக்களைக் குறிப்பிடுகையில், ரஷ்யா ஒரு பலமுனை உலகத்தை பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் புதுடெல்லியில் தனது 2 நாள் அரசுமுறைப் பயணத்தை புதுடெல்லியில் வியாழக்கிழமை தொடங்கினார். கடந்த மாதம் மாஸ்கோ உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு, அவர் இந்தியாவுக்கு வரும் முதல் பயணம் இது. ஹைதராபாத் இல்லத்தில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோம் வரவேற்கப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியையும் லாவ்ரோவ் சந்திக்க உள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்தார்.

இந்த பயணத்தை அறிவிப்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரே வரியில் அறிக்கையை வெளியிட்டது. “ரஷ்ய கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் 31 மார்ச் – 1 ஏப்ரல் 2022 நாட்களில் புது டெல்லிக்கு வருகை தருகிறார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மாஸ்கோவிற்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகளைக் கருத்தில் கொண்டு, ரஷ்ய கச்சா எண்ணெயை தள்ளுபடி செய்வது மற்றும் இருதரப்பு வர்த்தகத்திற்காக ரூபாய்-ரூபிள் செலுத்தும் முறையை இந்தியா கொண்டு வருவது ஆகியவை லாவ்ரோவின் புது டெல்லி பயணத்தின் மையமாக இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

பேச்சுவார்த்தையின் போது, ​​பல்வேறு ராணுவ தளவாடங்கள் மற்றும் S-400 ஏவுகணை அமைப்புகளுக்கான உதிரிபாகங்களை சரியான நேரத்தில் ரஷ்யா வழங்குவதை உறுதி செய்ய இந்தியா அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது.

லாவ்ரோவ் புதன்கிழமை சீனாவிற்கு இரண்டு நாள் பயணத்தைத் தொடங்கினார், இது ஆப்கானிஸ்தான் நெருக்கடியைப் பற்றி விவாதிக்க பெய்ஜிங்கால் கூட்டப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத்தான்.

லாவ்ரோவ் புதன்கிழமை சீனாவிற்கு இரண்டு நாள் பயணத்தைத் தொடங்கினார். ஆப்கானிஸ்தான் நெருக்கடியைப் பற்றி விவாதிக்க பெய்ஜிங்கால் கூட்டப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தலீப் சிங், பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் மற்றும் ஜெர்மனியின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை ஆலோசகர் ஜென்ஸ் ப்ளாட்னர் ஆகியோருடன் ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் இந்திய பயணம் ஆகியவை ஒரே நேரத்தில் அமைந்துள்ளது.

மார்ச் 30-31 வரை சிங் இந்தியாவில் இருந்தபோது ட்ரஸ் மார்ச் 31ம் தேதி இந்தியாவிற்கு வருகை தந்தார். ப்ளாட்னர் மார்ச் 30ம் தேதி டெல்லியில் இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 24, மார்ச் 2, மார்ச் 7 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினார்.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் மோடி இரண்டு முறை பேசினார். கடந்த வாரம், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதியாகவும், நிலையானதாகவும் இருப்பதாகவும், வன்முறையை உடனடியாக நிறுத்த முயல்வதாகவும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.