புதுடில்லி : பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஜ் டிராசுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைன் விவகாரம் உட்பட, பல்வேறு பிரச்னைகள் பற்றி பேசினார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் லிஜ் டிராஸ், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று டில்லியில் சந்தித்தார். இருவரும், ரஷ்யா – உக்ரைன் போர், இருநாட்டு உறவுகள் உட்பட, பல்வேறு பிரச்னைகள் பற்றி ஆலோசித்தனர்.
‘உக்ரைன் மீது, ரஷ்யா நடத்தி வரும் போரால், உலகின் அமைதியும், பாதுகாப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாடுகள் ஒன்று சேர்ந்து, சர்வதேச பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்’ என, ஜெய்சங்கரிடம் டிராஸ் வலியுறுத்தினார்.
பின், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த, கடந்த ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட, ௨௦௩௦ம் ஆண்டுக்கான தொலை நோக்கு திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி இருவரும் ஆலோசித்தனர்
புதுடில்லி : பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஜ் டிராசுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைன் விவகாரம் உட்பட, பல்வேறு பிரச்னைகள் பற்றி பேசினார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.