ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ப்ரூஸ் வில்லிஸ். டை ஹார்டு சீரிஸ், ரெட், 12 மங்க்கீஸ், பல்ப் ஃபிக்ஷன், தி ஜாக்கல் உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்த ப்ரூஸ் வில்லிஸ், இனி நடிக்க மாட்டாராம். இந்த அறிவிப்பை அவரின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். ப்ரூஸ் வில்லிஸ் `அஃபேஷியா’ (Aphasia) எனப்படும் அபூர்வ பாதிப்புக்குள்ளானதால் அவரின் குடும்பத்தார் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார்களாம். `அஃபேஷியா’ என்பது மூளையின் செல்களின் இயக்கத்தில் ஏற்படும் ஒருவித பாதிப்பு. அதன் விளைவாக பாதிக்கப்பட்ட நபர், அவரது மொழியை, பேச்சை, எழுத்தை… இப்படி எல்லாவிதமான தகவல் தொடர்புத் திறனையும் இழந்துவிடுவார்.
இந்தப் பிரச்னையோடு நடிப்பில் தொடர்வது சாத்தியமில்லை என்பதால்தான் ப்ரூஸ் வில்லிஸ் குடும்பத்தார் இந்த முடிவை அறிவித்துள்ளனர். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட ப்ரூஸ் வில்லிஸின் ரசிர்கள் பேரதிர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் ஆழ்ந்திருக்கிறார்கள்.
அஃபேஷியா பாதிப்பு என்பது என்ன… அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்…. அதிலிருந்து மீள முடியுமா…?
ப்ரூஸ் வில்லிஸுக்கு ஏற்பட்டுள்ள அதே பிரச்னையை சென்னையைச் சேர்ந்த ஒருவரும் எதிர்கொண்டிருக்கிறார்.
கியூப் சினிமாஸின் இணை நிறுவனரும், `180′ மற்றும் `நா நுவ்வே’ படங்களின் இயக்குநரும், 500க்கும் மேலான விளம்பரப் படங்களை இயக்கியவரும், கடந்த வருடம் ஓடிடியில் வெளிவந்த `நவரசா’ வெப் சீரிஸின் இணைத் தயாரிப்பாளருமானவர் ஜெயேந்திரா. இவரின் மனைவி சுதா, ஹெச்.ஆராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.
சுதாவுக்கு திடீரென `அஃபேஷியா’ பாதிப்பு ஏற்பட்டதில் அவரின் ஒட்டுமொத்த குடும்பமும் கலங்கிப் போயிருக்கிறது. பல வருட சிகிச்சை, தெரபி, குடும்பத்தாரின் ஆதரவினால் மெள்ள மெள்ள மீண்டு கொண்டிருக்கும் சுதா- ஜெயேந்திராவின் விரிவான பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.