சென்னை: மருத்துவர் சுப்பையாவை இடைநீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தஞ்சாவூர் பள்ளி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு முதல்வர்ஸ்டாலின் வீட்டை ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்த அவர்களை மருத்துவர் சுப்பையா நேரில் சென்று சந்தித்ததால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பாகநேற்று நடந்தது. இருதரப்புவாதங்களையும் கேட்ட நீதிபதி,மருத்துவர் சுப்பையாவின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவி்ட்டுள்ளார். மேலும் மருத்துவர் சுப்பையாவுக்கு பண பலன்களுடன் மீண்டும் பணி வழங்க வேண்டும்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்த விசாரணையை அதிகாரிகள் 12 வாரத்துக்குள் முடிக்க வேண்டும். இந்த விசாரணைக்கு மனுதாரர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.