மிரிஹான சம்பவம் கடும்போக்குவாதிகளின் செயற்பாடு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றச்சாட்டு

மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் வீட்டருகில் நேற்று (31) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை கடும்போக்குவாதிகளின் செயற்பாடு.

இதனால் 39 மில்லியன் ரூபா பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது என்று சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு உரிமை இருந்தாலும், அதனூடாக நாட்டை அராஜகப்படுத்துவதற்கான உரிமை இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக 1983, 1988, 1989ஆம் ஆண்டு யுகத்தினை நோக்கி மீண்டும் நாடு செல்ல நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு திறக்கப்பட்ட 05 மாதங்களுக்குள் ஒரு இலட்சம் சுற்றுலா பயணிகளை வரவழைக்க முடிந்ததாகவும், இதனால் 500 மில்லியன் டொலர் இலாபம் கிடைத்துள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்லும் பணியாளர்கள் நாளாந்தம் அதிகரித்துள்ள நிலையில், இவர்களூடாக எதிர்வரும் மாதங்களில் அந்நிய செலாவணி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்கட்சியினருக்கு பாரிய சிக்கல் ஏற்படும் எனவும், நெருக்கடி நிலை தீர்ந்துவிட்டால் எதிர்கட்சியினருக்கு அரசியல் நடத்த முடியாது 

மிரிஹானயில் நேற்றிரவு இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இயலுமானவரை அமைதியான முறையில் கலைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததார். எனினும், அதிகாலை 1.30 மணியளவில் நிலைமை மோசமடைந்தாக குறிப்பிட்ட அமைச்சர் , குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்தி நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, 30 நிமிடங்களுக்குள் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. தங்களுக்கு கிடைத்துள்ள காணொளி ஆதாரங்களுக்கு அமைய இது கடும்போக்குவாதிகளின் செயற்பாடு என்பது தெட்டத்தெளிவாக புலனாவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

மக்கள் தற்சமயம் சில பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனினும், இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நாடு மீண்டும் சீரழியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொரோனா காரணமாக வீழ்ச்சி அடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியளவில் 15 லட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்துவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாட்டில் இவ்வாறான குழப்ப நிலைகள் ஏற்படுத்தப்படுமானால், அந்த இலக்கை அடைய முடியாது போகும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.