முகேஷ் அம்பானியின் வெற்றிக்கான 4 சீக்ரெட்.. என்னன்னு தெரிஞ்சுக்கணுமா.. இதை படியுங்க?

பிறக்கும்போது ஏழையாய் பிறப்பது உன் தவறல்ல.. ஆனால் இறக்கும்போது ஏழையாய் சாவது தான் உன் தவறு என்ற பில்கேட்ஸின் வரிகளை பலரும் படித்திருக்கலாம்.

ஆனால் இந்த வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்த ஒருவர் தான் திரும்பாய் அம்பானி, முகேஷ் அம்பானி. கோகிலாபென் அம்பானி மற்றும் திருபாய் அம்பானிக்கு முகேஷ் அம்பானி மகனாக பிறந்தபோது அவர்களின் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் தான்.

ஆனால் திருபாய் அம்பாயின் முயற்சியினால் உருவானதே ரிலையன்ஸ் சாம்ராஜ்யம்.

நடுத்தர குடும்பம்

எல்லோரிடமும் இந்த சமயத்தில் ஒரு கேள்வி எழலாம். முகேஷ் அம்பானி இந்த அளவுக்கு பெரிய இடத்தினை பிடிக்க சரியான அடித்தளம் இருந்ததே என்று. ஆனால் அதனையும் சரியாக பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே அதனை தக்க வைக்க முடியும். அதனை மேற்கோண்டு வளர்க்கவும் முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் முகேஷ் அம்பானி.

 முகேஷ் அம்பானி Vs அனில் அம்பானி

முகேஷ் அம்பானி Vs அனில் அம்பானி

இதே சரியான தளம் இருந்தும் பில்லியனர் பட்டியலில் இருந்து விலகி, இன்று பல ஆயிரம் கோடி கடனில் வாழ்ந்து வருபவர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி.

ஆக வாழ்வில் அயராத உழைப்புக்கும், நல்ல நிர்வாக திறமையும் தான் ஒருவரை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும் என்பதற்கு சிறந்த உதாரணம் முகேஷ் அம்பானி. அவர் தனது வணிக வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என கூறிய முக்கிய 4 அம்சங்கள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

 

யதார்த்தமாகவும் கவனமாகவும் இருங்கள்
 

யதார்த்தமாகவும் கவனமாகவும் இருங்கள்

தொழிழ் முனைவோர் ஒரு லட்சியத்துடன் இருக்கலாம். ஆனால் அந்த லட்சியம் யாதார்த்தமானதாக இருக்க வேண்டும். உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதை உணர வேண்டும்.

வணிகம் என்பது விடாமுயற்சி

வணிகம் என்பது விடாமுயற்சி

நான் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம் விட்டுவிடக்கூடாது. பெரும்பாலான விஷயங்களை முதல் முயற்சியில் அடைய முடியாது.

உண்மையில் நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறு இது தான். ஒரு வணிகம் செய்ய வேண்டும் என நினைப்போம். ஆனால் ஒரு முறை தோல்வி கண்டு விட்டால், இது நமக்கு சரிவராது என, அதனை விட்டு விடுவோம்.

 

 தொழில் நுட்பம்

தொழில் நுட்பம்

நீங்கள் தொழில் நுட்ப பலனை பயன்படுத்தினால் அதுவே சிறந்த வணிகம்.

அதுமட்டும் அல்ல ஒரு முறை தனது உரையில், யார் ஒருவர் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லையோ அவர் வாழ்வில் முக்கிய உயரத்தை தொடமாட்டார் என்று கூறினார். அதனை இன்று வரையிலும் நிரூபித்துக் காட்டிக் கொண்டும் உள்ளார்.

 

குடும்பத்தை மறந்து விடாதீர்கள்

குடும்பத்தை மறந்து விடாதீர்கள்

எனது தந்தையின் வாழ்க்கையே ரிலையன்ஸ் தான். ஆனால் என்ன பணி அழுத்தம் இருந்தாலும், அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பதினருடன் செலவிடுவார். நானும் அதனையே செய்ய முயற்சிக்கிறேன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

business Advice by mukesh ambani: Top 4 success rules

business Advice by mukesh ambani: Top 4 success rules/முகேஷ் அம்பானியின் வெற்றிக்கான 4 சீக்ரெட்.. என்னன்னு தெரிஞ்சுக்கணுமா.. இதை படியுங்க?

Story first published: Friday, April 1, 2022, 19:42 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.