முதலிரவை சிறையில் செலவிட்ட பிரித்தானிய தம்பதியருக்கு கிடைத்துள்ள அடுத்த அடி


ஸ்காட்லாந்தில், தங்கள் திருமணத்தன்று ஏற்பட்ட களேபரத்தில் மணமகள் தன் தாயைத் தாக்க, மணமகனும் மாப்பிள்ளைத் தோழனும் ஆளுக்கொருபக்கம் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களைத் தாக்க, மணமக்கள் தங்கள் முதலிரவை சிறையில் செலவிட நேர்ந்தது.

Uddingston என்ற நகரில், Claire (26) என்ற பெண்ணுக்கும் Eamonn Goodbrand (33) என்ற நபருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அப்போது ஏதோ காரணத்துக்காக வாக்குவாதம் ஏற்பட, Claire தன் தாயான Cherry-Ann Lindsayயை தலைமுடியைப் பிடித்து இழுத்து முகத்தில் குத்தியிருக்கிறார். கழுத்தை நெரித்திருக்கிறார். அவர் கீழே விழ, அவரை ஷூ காலால் மிதித்திருக்கிறார் Claire.

மணமகளுக்கு ஆதரவாக மணமகனான Eamonnம், மாப்பிளைத் தோழனும், Eamonnஇன் தம்பியுமான Kieranம் சண்டையில் கலந்துகொள்ள, இரண்டு பேருமாக திருமணத்துக்கு வந்த இரண்டு விருந்தினர்களை துவம்சம் பண்ணியிருகிறார்கள். மணமகன் Eamonn ஒரு குத்துச்சண்டை வீரர் வேறு!

ஆக, திருமண வீட்டில் ஒரே களேபரமாக, பொலிசார் வரவழைக்கப்பட்டார்கள்.

பொலிஸ் விசாரணைக்குப் பின் Claire, Eamonn மற்றும் Kieran ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டார்கள். எனவே, மணமக்கள் முதலிரவை சிறையில், அதுவும் தனித்தனி அறைகளில் செலவிட நேர்ந்தது.

இந்நிலையில், அவர்களுக்கு அடுத்து ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, Claire தன் தாயான Cherryக்கு ஒரே மகள் ஆவார்.

Cherryக்கு இரண்டு வீடுகளும், ஒரு கேரவனும் உள்ளன. எல்லாம் அவரது மகளுக்குத்தான் உயில் எழுதி வைத்திருந்தார் Cherry. அத்துடன், அவரது காப்பீட்டுத் தொகையும் அவரது மகளுக்குத்தான் கிடைக்கும்.

ஆனால், தன் மகள் தன் திருமணத்தன்று தன்னை செருப்பால் அடித்ததால், தன் உயிலை மாற்றி எழுதிவிட்டார் Cherry.

இனி அவளுக்கு எதுவும் கிடைக்காது என்கிறார் Cherry.

அத்துடன், தற்போது Claireம் Eamonnம் Cherryக்கு சொந்தமான ஒரு வீட்டில்தான் தங்கியிருக்கிறார்கள். ஆகவே, அந்த வீட்டிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் Cherry.

மொத்தத்தில், தாய் என்றும் பாராமல் Cherryயை செருப்பால் அடித்த Claireக்கு அடி மேல் அடி கிடைத்துள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.