முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில், டெல்லி பயணத்தின் மர்மத்தை முதல்வர் ஸ்டாலின் விளக்குவாரா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோரை சந்தித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டெல்லி பயணத்தின் மர்மத்தை முதல்வர் ஸ்டாலின் விளக்குவாரா என்று கேள்வி எழுப்பி அறிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “முதல்வர் ஸ்டாலின், தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடன், துபைக்குச் சென்றார். துபை கண்காட்சி முடிய 6 நாள்களே இருந்த நிலையில், மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட தமிழக அரங்கை திறந்து வைத்தார்.
அரசுமுறைப் பயணம் என்றால் குடும்பத்துடன் தனி விமானத்தில் சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பியதற்கு அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு திமுக செலவு ஏற்றதாக மழுப்பினார்.
தமிழகம் முழுவதும் வணிக வளாகங்கள் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சிறு வணிகர்கள் நலன் பாதிக்கப்படக் கூடாது என்று சொன்னவர், முதல்வரானவுடன், வணிக வளாகம் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
பதவிக்கு வந்த பத்து மாத காலத்தில் சிக்கலில் சிக்கியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தம்மையும் தமது குடும்பத்தினரையும் காப்பாற்றக் கோரி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் உண்மை என்றால், உப்பைத் திண்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும். அதனால், முதல்வரின் இந்த டெல்லி பயணத்தின் மர்மத்தை அவர் விளக்குவாரா?” என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“