இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்க, இலங்கை மக்களுக்கு தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ஜனாதிபதி இல்லம் மற்றும் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்க இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு காலத்தில் சிறந்த தேசமாக திகழந்த நாம் எப்படி வீழ்ந்தோம்.
கட்சி அரசியல் நாட்டின் ஒருமைப்பாட்டை மற்றும் ஒற்றுமையை நாசமாக்கியுள்ளது.
இலங்கை மக்களின் மகிழ்ச்சி மற்றும் சிரிப்பு தற்போது அழுகை மற்றும் துயரமாக உள்ளது.
நாம் மீண்டும் ஒன்றிணைய வேண்டும். அரசியலை புறந்தள்ள வேண்டும். தேசமாக ஒன்றுப்பட்டு, சரிவிலிருந்து மீண்டு வர வேண்டும்.
ரஷ்ய படைகள் வெளியேறுகின்றன! உக்ரைன் முக்கிய தகவல்
இலங்கையே விழித்துக்கொள், நம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம்.
மோசமான தலைமையை புறகணிப்போம் என இலங்கை கிரிக்கெட் வீரர் ஹசரங்க பதிவிட்டுள்ளார்.
தற்போது ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் ஹசரங்க, இந்திய மதிப்பில் 10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.