ரூ.1.42 லட்சம் கோடியை தாண்டியது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: கடந்த ஜன., மாதம் ரூ.1.40 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி சாதனை படைத்த நிலையில் கடந்த மார்ச் மாத வசூல் அதனை முறியடித்து ரூ.1,42,095 கோடி வசூலாகியதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கை: மார்ச் மாதம் ஜிஎஸ்டி ரூ.1,42,095 கோடி வசூல் ஆகியது.அதில்,
சிஜிஎஸ்டி ரூ.25,830 கோடி
எஸ்ஜிஎஸ்டி ரூ.32,378 கோடி
ஐஜிஎஸ்டி ரூ.74,470 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.39,131 கோடி உட்பட)
செஸ்- ரூ.9,417 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த 981 கோடி உட்பட) அடங்கும்.

latest tamil news

கடந்த ஜன., மாதம் அதிகளவாக ரூ.1,40,986 கோடி வசூலாகி சாதனை படைத்தது. இதனை மார்ச் மாத வசூல் முறியடித்து ரூ.1,42,095 கோடி வசூலாகியது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.