விமான எரிபொருள் விலை 2 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி:

விமான இயக்கத்திற்கு ஜெட் எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

15 நாட்களுக்கு ஒரு முறை என மாதத்தில் 1 மற்றும் 16-ந்தேதிகளில் சர்வதேச நிலையை பொறுத்து விமானத்துக்கான ஜெட் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த மாதம் 16-ந்தேதி எப்போதும் இல்லாத வகையில் ஜெட் எரிபொருள் விலை 18.3 சதவீதம் உயர்த்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் விமான எரிபொருள் விலை இன்று 2 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு கிலோ லிட்டருக்கு 2,258.54 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது டெல்லியில் விமான எரிபொருள் கிலோ லிட்டர் ரூ.1,12,924.83 ஆக இருக்கிறது.

விமான எரிபொருள் விலை 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகளுக்கான விமான கட்டணம் மேலும் அதிகரிக்கும். விமானம் இயக்கப்படுவதில் கிட்டத்தட்ட 40 சதவீதம் எரிபொருளுக்கு செலவாகி விடுகிறது.

கடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து விமான எரிபொருள் விலை மாதத்திற்கு 2 முறை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் விமான எரிபொருள் விலை இதுவரை 7-வது முறையாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து 1000 கிலோ லிட்டருக்கு ரூ.38,902.92 உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.