மருத்துவரும், ஜோதிடருமான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த
நாஸ்டர்டாமஸ்
, உலகில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள முக்கிய சம்பவங்களை தான் வாழ்ந்த 15 ஆம் நூற்றாண்டிலேயே கணித்து, அதனை புத்தகமாகவும் எழுதி உள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி படுகொலை, ஹிட்லரின் அட்டகாசங்கள், அமெரிக்க வர்த்தக மைய கட்டடம் தகர்ப்பு என நாஸ்டர்டாமசின் தீர்க்கதரிசனமான கணிப்புக்கு நிறைய உதாரணங்களை சொல்லி கொண்டே போகலாம்.
இவற்றின் வரிசையில் அவரது புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு தகவல்தான் தற்போது உலக அளவில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெடித்தது மக்கள் போராட்டம்… ரகசிய இடம் தேடி ஓடிய அதிபர்!
2022 இல் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக உலக அரங்கில் சில சம்பவங்கள் நடக்கும் என்று அவர் தனது புத்தகத்தில் எழுதி உள்ளாராம். அவரது இந்த கணிப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது உக்ரைன்- ரஷியா-உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த ஆண்டு உலகில் அணுகுண்டுகள் வெடிக்கும் எனவும், அதனால் ஏற்படும் கதிர்வீச்சால் உலகின் தட்ப வெப்பநிலையே மாறி பனிப்பாறைகள் உருகும். இதனால் கடல்நீர் மட்டம் அதிகரிக்கும் என்றும் நாஸ்டர்டாமஸ் கணித்துள்ளாராம்.
தினமும் எகிறி அடிக்கும் கொரோனா…நாடு முழுவதும் விரைவில் பொது முடக்கம்?
இவற்றுக்கெல்லாம் மேலாக 2023 ஆம் ஆண்டு மிகப் பெரிய உலகப்போர மூளும் என்றும், அப்போது உலகமே இருளில் மூழ்கும் எனவும் நாஸ்டர்டாமஸ் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது பல்வேறு கணிப்புகள் இதுநாள்வரை அப்படி நடந்து வருவதால், உலகப் போர் குறித்த அவரின் கணிப்பும் நிஜமாகவே நடந்துவிடுமோ என்று உலக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அடுத்த செய்திஏப். 19 வரை மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுத்த முடிவு!