வெளியானது ஜி.வி பிரகாஷின் காதலிக்க யாருமில்லை படத்தின் அப்டேட்…!

ஜி.வி.பிரகாஷின் ‘காதலிக்க யாருமில்லை’ படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.பிரபல இசையமைப்பாளரான
ஜி.வி.பிரகாஷ்
நடிப்பில் உருவாகியுள்ள செல்ஃபி திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காதலிக்க யாருமில்லை’. இந்த படத்தில் கதாநாயகியாக பிக்பாஸ் பிரபலம்
ரைசா வில்சன்
நடித்துள்ளார்.இந்த படத்தை கமல் பிரகாஷ் என்பது இயக்கி வருகிறார்.

நெட்டிசன் கேட்ட ‘ஒத்த’ கேள்வி: யாஷிகாவின் பதிலால் ஆடிப்போன ரசிகர்கள்…!

இந்த படத்தில் குரு சோமசுந்தரம், யோகிபாபு, கெளசல்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்‌. இந்த படத்தின் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஆனால் கொரானா பரவலால் காரணமாக படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே முடங்கியது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. கேரள மாநிலம்
மூணாறு
பகுதியில்இந்த படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் பழைய கால
கார்
ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த படப்பிடிப்பின் புகைப்படங்களை நடிகை ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

அடுத்த செய்திDhanush: நம்ப வைத்து கழுத்தறுத்த தனுஷ்… நொறுங்கிப்போன ரஜினி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.