புதுடெல்லி:
ரஷியா-உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா இதுவரை நடுநிலையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் இன்று நேரில் சந்தித்தார்.
போரை கைவிட்டு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்…இந்தியாவில் அதிகாரமிக்க தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம்